Homeசெய்திகள்ஆவடிஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி - பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி

-

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே எலி சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றதழ்கள்,வரி செலுத்த உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனர். மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் 100கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறன்றனர். இவர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு டேங்க் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது.

முறையான பராமரிப்பு இல்லாததால் குடிநீர் இயந்திரத்தின் உள்ளே மேல் பகுதியில் எலிகள் சுற்றி திரிந்து வருகின்றன. மேலும் இவை குடிநீர் சேமிக்கும் பகுதியில் அலைந்து திரிவதால் இந்த நீரை பருகுவோருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது. இதே போன்று அலுவலகத்தின் வெளிப்புற பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் முழுவதுமாக உபயோகமற்ற நிலையில் இருந்து வருகிறது.

எனவே உடனடியாக கோடை காலம் நெருங்குவதை ஆவடி மாநகராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு குடிநீர் இயந்திரங்களை முறையாக பராமரித்து ,சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கும் அலுவலர்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது..

MUST READ