Homeசெய்திகள்ஆவடிஆவடி - 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

-

ஆவடி - 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் பணிகளுக்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று விரைவில் பணி தொடங்கப்படும்.

தனியார் கல்லூரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அக். 16 அன்று நேரில் ஆய்வு செய்வார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ஆவடியில் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தபின் தெரிவித்துள்ளார்.

ஆவடி - 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராம் சேக்காடு சுரங்கப்பாதை, அண்ணனூர் ரயில்வே மேம்பாலம்,வீட்டு வசதி வாரிய பகுதிகளில் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் கே என்.நேரு, ஆவடி சா.மு நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆவடி - 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கைதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராம் ,ஆவடி வீட்டு வசதி வாரிய உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட. ஆவடி சரஸ்வதி நகரில் உள்ள பல்வேறு தெருக்களில் கழிவு நீரால் சூழ்ந்துள்ள நிலையில். அங்கு மழைநீர் வெளியேறும் கால்வாய் உள்ள தனியார் கல்லூரியின் தண்ணீர் வெளியேற முடியாத சூழ்நிலையில் புகார்கள் எழுந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் உதயகுமார் ஆணையர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆய்வு செய்வார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

ஆவடி - 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் பணிகளுக்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று விரைவில் பணி தொடங்கப்படும் எனவும் இதற்குப் பிறகு பாதிப்புகள் குறையும் என ஆவடியில் ஆய்வு பின் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

MUST READ