Homeசெய்திகள்ஆவடிஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

-

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆவடி கலைஞர் திடலில் திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கடந்த 23ம் தேதி அன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் தாக்கல் செய்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவருகிறார்கள்.

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகராட்சி அருகே கலைஞர் திடலில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு  ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு  புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் தொடர்ந்து தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருவதாகவும் தமிழ்நாட்டிலிருந்து நிதியை பெரும் ஒன்றிய பாஜக அரசு நிதியை மட்டும் வழங்குவதில்லை, தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய பாஜக அரசு கெடுக்க கூடாது, மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு பார்ப்பதாகவும், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்கு என்று ஒன்றிய பாஜக அரசு நிதி வழங்கவில்லை என்று கூறியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கைகளில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் ஆங்காங்கே பதாகைகள் வைத்தும் முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

MUST READ