Homeசெய்திகள்ஆவடிபோதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் சசிகலா, போதை இல்லா தமிழகம் எனும் முதல்வரின் திட்டத்தை முன்வைத்து கஞ்சா குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றினை பாடி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் பள்ளிகூட பறவைகள் எல்லாம் கஞ்சாவை நஞ்சாக எண்ணுங்கள் என
விழிப்புணர்வூட்டும் வகையில் பாடி உள்ளார். போதை இல்லா வாழ்க்கை ஜோரு, போதை இல்லா தமிழகம் கூறு என கருத்தாக இளைய சமுதாயம் மீது அக்கறை கொண்டு பாடிய பாடல் அனைவரது மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ