திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரி அருகே வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
நீதிமன்றம் செல்லும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாக சென்ற 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். வழக்கறிஞர் சட்ட மசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாட்டில் அமல்ப்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டனர்.
கருப்பு கோர்ட் சூட்டில் ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அணிந்து வந்து பட்டாபிராம் அருகே அண்ணா நகரில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் அங்கிருந்து அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க ஊர்வலமாக சென்றனர். சட்டத்துறை அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புரட்சி பாரதம் கட்சி தலைவர்களையும் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் குறல் கொடுக்க வலியுறுத்தவுள்ளனர். இது குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் மனு அளிக்க உள்ளனர். ஊர்வலத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன்
வழக்கறிஞர்கள் பணியை செய்யும் போது, தாக்குதல், மிரட்டல் போன்ற பல சம்பவங்கள் நடைபெறுகிறது.ரௌடிகளிடம் இருந்து அச்சுறுத்தல்களும் வருகிறது, போதிய பாதுகாப்பு இன்றி தொழில் செய்து வருகிறோம்.
இதனால் எங்கள் கடமைகளை சரியான முறையில் செயல்படுத்த முடியாமல் போகிறது. மேலும் காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களான எங்களுக்கு போதிய மரியாதை கிடைப்பதில்லை பல சமயம் நாங்கள் ஒருமையில் நடத்தப்படுகிறோம், இதில் பெண் வழக்கறிஞர்கள் என்றால் மேலும் அவமானப்பட வேண்டியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் விரைவில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.