முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான நாசர் உடல் நலக்குறைவுக் காரணமாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டிபெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி….. டீசர் ரிலீஸ் அப்டேட்!
அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகளை ஆய்வுச் செய்த மருத்துவக் குழுவினர், நாசரின் உடலில் பித்தப்பையில் கல் இருப்பதை உறுதிச் செய்தனர். அதைத் தொடர்ந்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து, கல் அகற்ற உள்ளது.
அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து வரும் மருத்துவக்குழுவினர் இன்றே அறுவைச் சிகிச்சையைச் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய விஷால்!
இதனிடையே, நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.