Homeசெய்திகள்ஆவடிஆவடி காவல் ஆணையரகம் - 114 பேர் மீது குண்டர் சட்டம்

ஆவடி காவல் ஆணையரகம் – 114 பேர் மீது குண்டர் சட்டம்

-

ஆவடி காவல் ஆணையரகம், குண்டர் சட்டம், கி.சங்கர், 114 பேர், மத்திய ஆவடி காவல் ஆணையரகத்தில் குண்டர் சட்டம் XIV இன் கீழ் 114 குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது நடவடிக்கை.

ஆவடி காவல் ஆணையரகம் - 114 பேர் மீது குண்டர் சட்டம்ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல் ஆணையாளர் கி.சங்கர், இந்தியக் காவல் பணி உத்தரவின் பேரில், பல்வேறு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரௌடிகள் 68 பேர், கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 15 பேர். போதைப்பொருட்கள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 24 பேர்.

கள்ளச் சந்தை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் மற்றும் இணையதள குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேர் என மொத்தம் இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 114 குற்றவாளிகள் மீதான பரிந்துரையின் படி ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

 

இதில் குறிப்பாக இம்மாதம் (ஜூலை 2024) மட்டும் ஆவடி காவல் ஆணையரகத்தில் பல்வேறு தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்று குழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

MUST READ