Homeசெய்திகள்ஆவடிஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் - மக்கள் கோரிக்கை!

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் – மக்கள் கோரிக்கை!

-

சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் புறநகர் ரயில் நிலையம் வரை உள்ள இரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் - மக்கள் கோரிக்கை!

சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளுர் வரை உள்ள வழித்தடங்களில் லிப்ட் வசதி வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக  இருந்து வருகிறது. தற்போது வில்லிவாக்கம், அம்பத்தூர், ஹிந்து கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு லிப்ட் வசதி கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் - மக்கள் கோரிக்கை!

இவ்வழிதடத்தில் வியாசர்பாடி ஜீவா,  பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் மட்டும் சுரங்கப்பாதை வசதி உள்ளது. மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் சுரங்கப்பாதை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஆவடி ரயில் நிலையத்தில்  தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து கடந்து செல்கின்றனர். அதில் சில மாதங்களுக்கு முன்பு ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மட்டும் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் ஆவடி நேரு பஜாரில் இருந்து சிடிஎச் ரோடு மற்றும் பேருந்து நிலையம் செல்வதற்கு ஏதுவாக உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் நேரு பஜார்,  சிடிஎச் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தை இணைப்பதற்காக சப்வே அமைக்க வேண்டும் என்று சிஎம்டிஏ (CMDA, Chennai) நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் அதுகுறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரயில் பயணிகள் புலம்புகின்றனர்.

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் - மக்கள் கோரிக்கை!

ஆவடியில் வசித்து வரும்  கல்யாணி என்பவரிடம் இதுகுறித்து கேட்டபோது, மூத்த குடிமக்கள், மகளிர், சிறு  குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் இந்த ஃபுட் ஓவர் பிரிட்ஜ் பயன்படுத்துவதற்கு சிரமப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஆவடியில் உள்ள பள்ளி, கல்லூரிகள்,  தொழிற்சாலைகள்,  மருத்துவமனைக்கு  சென்று வருபவர்கள்  மற்றும்  வியாபாரிகள் நாள்தோறும் சி.டி.எச் ரோட்டில் இருந்து நேரு பஜார் வழியாக கடக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. அதனால் சுரங்க பாதை வசதி இப்பகுதியில் அவசியம்  தேவை என தெரிவித்தார்.

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் - மக்கள் கோரிக்கை!

மேலும், இதுபற்றி ஸ்வேதா என்ற கல்லூரி  மாணவியிடம் கேட்ட பொழுது ரயில் நிலைய நடைபாதையில்  சிசிடிவி கேமரா மிகவும் அவசியம் என தெரிவித்தார். ஸ்ரீனிவாசன் என்ற வியாபாரி கூறும்போது எஸ்கலேட்டர் வசதி இருந்தால் அனைத்து பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் - மக்கள் கோரிக்கை!

MUST READ