Homeசெய்திகள்ஆவடிஆவடி: தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

ஆவடி: தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

-

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக தொலைக்காட்சி பணியாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் சன் தொலைக்காட்சி ஊழியர்கள் வெற்றிப்பெற்றனர்.

இப்போட்டியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தனர்.

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

இரண்டாம் நாளன நேற்று ஆவடி காவல் ஆணையாளர் கி சங்கர் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கி கௌரவப்படுத்தினார்.

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக தொலைக்காட்சி பணியாளர்களுக்கான இரண்டு நாள் மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது.முதல் நாள் மட்டைப்பந்து போட்டியினை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தனர்.

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

இந்த இரண்டு நாள் மட்டைப்பந்து போட்டியில் பல்வேறு தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் செய்தி வாசிப்பாளர் என பல்துறை சார்ந்தவர் கலந்து கொண்டு விளையாடினர்.இப்போட்டி கலைஞர் டிவி, சன் நெட்வொர்க், நியூஸ் தமிழ், ஜீ தமிழ், வேந்தர் டிவி, சத்யம் டிவி, பிளாக் ஷீப் டிவி, குமுதம் டிவி, ராஜ் டிவி, பாலிமர் டிவி, என 16 அணிகளாக களம் இறங்கி விளையாடினர்.

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

கடைசியாக இரண்டு அணிகள் மோதியதில் முதல் பரிசு சன் டிவி மற்றும் இரண்டாம் பரிசு பிளாக் ஷீப் டிவி வெற்றனர்.  வெற்றி பெற்ற அணியினருக்கு ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் துணை ஆணையாளர் ஐமன் ஜமால் மற்றும் சினிமா துறை சார்ந்தவர்களும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கினர்.

ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி எளிதில் வெற்றி

இந்த மட்டைப்பந்து போட்டியில் பல்வேறு தனியார் தொலைக்காட்சி ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

MUST READ