Homeசெய்திகள்ஆவடிஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

-

பட்டாபிராமில் சர்வதேச பழங்குடியினர் தின கொண்டாட்டம்

ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு  பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.

பட்டாபிராமில் சர்வதேச பழங்குடியினர் தின கொண்டாட்டம்

ஆவடி அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி நகர் பகுதியில் ஒன்றுப்பட்ட பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் கே ஆர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி IAS,மற்றும் ஆவடி 1ஆவது மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.பின்பு பழங்குடியினர் வசிக்கக்கூடிய பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.

ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

 

பின் செய்தியாளர்களை சந்தித்த ஆவடி மாநகர ஆணையர் கந்தசாமி ஐ ஏ எஸ்,  பேசுகையில்,பழங்குடியின மக்கள் தங்களது பிள்ளைகளை முன்னோர்கள் இருந்தது போல் இல்லாமல் பழக்கவழக்கங்களை மாற்றி கட்டாயமாக பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்றும் அதேபோல் தமிழக அரசு வழங்கக்கூடிய அனைத்து நல திட்டங்களையும் பெற்று பயனடைய வேண்டும் என்றும் அதேபோல் நல்ல துறையில் பணியில் சேர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பள்ளி கல்வி முடித்தவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

மேலும் பழங்குடியின மக்களுக்கு சர்வதேச பழங்குடியின தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் வங்கி கிளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

MUST READ