Homeசெய்திகள்ஆவடிஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்

ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்

-

சென்னை ஆவடி வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன் வயது (82) நேற்று மாலை காலமானார்.

ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்ஆவடியில் வேல்டெக் பல்கலைக்கழகம் 1997 முதல் இயங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தால்  பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டு பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல்  அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு உயர்கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்டு பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது.  நிறுவனத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன் நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக காலமானார்.

நேற்று இரவு 11.45 மணியில் இருந்து இன்று காலை 6.45 வரை அவரது உடல் சென்னை ஆர்.ஏ.புரம் AB Avenue – வில் உள்ள  அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8.00 மணி அளவில் வேல் டெக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஹைடெக் கன்வென்ஷன் ஹாலுக்கு (High Tech Convention Hall) கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து காலை 10 மணி அளவில் திரந்த வெளி வாகனத்தில் VTU convocation hall – க்கு கொண்டுவரப்பட்டு மதியம் 3.00 மணி வரை மாணவர்கள், பேராசிரியர்கள் ,பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்மேலும் மாலை 3.00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்று முடிந்தது.

டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் அவரது கணவருடன் ஆரம்ப காலத்திலிருந்தே நிறுவனத்தை  தொடங்கி பெரும் வளர்ச்சிக்கு  பாடுபட்டவர். மிகவும் பண்பானவர் , அனைத்து துறை மற்றும் துறை சாரா மக்களுடன்  நேர்த்தியாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர். அவரது மறைவு குடும்பத்திற்கும், வேல் டெக் நிறுவனத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ