- Advertisement -
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தலைவர் துரை வீரமணி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை பசுமாடு தாக்கியது. அதை மேற்கோள் காட்டி, சாலைகளில் கால்நடைகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை உள்ளிட்ட 16
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், பொதுமக்கள் பலர் தங்கள் பகுதியில் உள்ள சாலை அமைத்தல்,மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், பூங்காக்களில் குடிநீர் வசதி, பராமரிப்பு, மற்றும், ஆழ்துளை கிணறு அமைத்தல், சாக்கடை,உரக்குடில் சீரமைப்பு, நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தல், பொது கழிப்பறை சீரமைப்பு, உள்ளிட்ட பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்தனர்.