Homeசெய்திகள்ஆவடிபீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர்...

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்

-

- Advertisement -

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு மற்றும் கொரோனாவுடன் ஒப்பிட்டு பேசினார். சனாதனத்தை எதிர்ப் பதை விட ஒழிப்பதே சிறந்தது என்று கூறினார்.

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ 10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்றும், மேலும், அவருடைய தலையை வெட்டுவதற்கு ரூ 10 கோடி போதாதென்றால் சன்மானத்தை அதிகப்படுத்துவேன் என்று உத்திரப்பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்

திருநின்றவூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து பின் கூறியதாவது, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு சாமியார், தமிழ்நாடு அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை வெட்டி கொண்டு வரும் நபருக்கு ரூ.10,00,00,000 (ரூபாய் பத்து கோடி) சன்மானமாக கொடுக்கிறேன் என்று பகிரங்கமாக பொதுவெளியில் கூறி நாட்டில் மதக்கலவரத்தை உண்டாக்குகின்ற வகையில் பேசியது மட்டுமல்லாமல் சனாதானத்தில் உள்ள குறைபாடுகளை குறிக்கின்ற வகையில் தமிழக அமைச்சர் மதிப்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் ஒரு மாநாட்டில் பேசியது குறித்து அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாக நினைத்து மேற்படி பீகார் சாமியார் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு மிக நீளமான கூரிய வாள் போன்ற கத்தியால் அவரின் புகைப்படத்தில் குத்தி கொலை செய்வது போன்ற காட்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், அவரின் நிழல் படத்தை எரித்து அவர் நடந்து கொண்ட விதம் ஒரு நாட்டின் ஒரு மாநிலத்தின் அமைச்சரையே கொலை செய்வது போன்ற பொருள் கொள்ளும் நிலையில் உள்ளது. எனவே, அப்படி கொடுவாளை கொண்டு கொலை செய்வது போன்று கொலை வெறியோடு மீடியாக்களுக்கு சாமியார் கொடுத்த பேட்டி தீவிரவாதத்திற்கும் கொலை செய்யும் எண்ணத்திற்கும் உட்பட்டதாகும்.

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்

இப்படிப்பட்ட அந்த சாமியாரின் நடவடிக்கை இந்தியா முழுவதும் உள்ள மக்களின் அமைதியும் வாழ்வியலையும் குலைக்கும் நிலையில் அமைந்துள்ளது. எனவே, மேற்படி மீடியாக்களில் தன்னை வெளிப்படுத்தி கொண்ட பீகார் சாமியார் மீது கொலை முயற்சி செய்வதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்வதோடு, நாட்டில் மக்கள் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட சாமியாரையும் அவருடைய பின்புலத்தில் அவருடன் யார் யார் உள்ளனர். அவருக்கு பின்னால் எந்த தீவிரவாத அமைப்பு உள்ளது என்பதையும் கண்டறிந்து அவர்களையும், பீகார் சாமியாரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

MUST READ