Homeசெய்திகள்ஆவடிவீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?

வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?

-

இன்று ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) இருக்கிறது. அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறப்பதும் மூடுவதுமாய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?நேற்று ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்,29 ; மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி பிரியா,25. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?மூத்த மகள் ரூபாவாதி,5  தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று மாலை ரூபாவாதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது  ஃபிரிட்ஜை திறக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுமி மயக்கமடைந்தாள்.

அருகில் இருந்த குழந்தையின் தாய் பிரியா,மகளை மீட்டு, அருகிலுள்ள ஆவடி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் சிறுமி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன? இதுகுறித்து ஏசி, ஃபிரிட்ஜ் மெக்கானிக்

அப்துல் ஃபயாஸிடம் இந்த விபத்து எப்படி நடந்தது என்று கேட்டபோது, அவர் ஃபிரிட்ஜ் மெக்கானிக் தொழிலில் 15 வருடங்களாக  ஈடுபட்டு வருகிறேன். இதுவரை ஃப்ரிட்ஜில் சாக் அடித்து இறந்ததாக பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை.   இது போன்ற சம்பவம் எப்பொழுதாவது நடப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். இந்த சம்பவம் மன வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

ஃபிரிட்ஜ் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில டிப்ஸ் கூறுகிறேன். ஃபிரிட்ஜ் எர்த்திங் பாயிண்ட் சரியாக உள்ளதா என சரி பார்க்கவும். மேலும் எம்.சி.பி வீட்டில் பொருத்தப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளவும். எம் சி பி இது போன்ற மின்சாரம் ஷாக் அடிப்பதை கட் ஆப் செய்துவிடும். ஃப்ரிட்ஜில் பின்புறம் தேங்கியுள்ள நீரினால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அடிக்கடி நீரை சுத்தம் செய்து கொள்ளவும், மேலும் பின்புறம் அமைந்துள்ள பகுதி அனைத்திலும் மின்சாரம் பாயக்கூடியவை இதனால் குழந்தைகளை பின்புறம் எக்காரணம் கொண்டும் தொடுவதற்கு அனுமதிக்க கூடாது.

மேலும் மின்சாரம் பாயக்கூடிய  ஒயர்களில் எலி கடித்து உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும். வருடம் ஒருமுறை  அருகாமையில் உள்ள மெக்கானிக்கை அணுகி எலக்ட்ரானிக் பொருட்களை சரி பார்த்துக் கொள்ளவும். இவற்றைப் பின்பற்றினால்  பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும்  என்று ஆலோசனை கூறினார்.

MUST READ