Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராம் சி.டி.எச். சாலை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு

பட்டாபிராம் சி.டி.எச். சாலை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு

-

அக்டோபர் மாதம் ஒரு வழி பாதை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை- - திருத்தணி நெடுஞ்சாலை -ஒரு வழி பாதை விரைவில் அமைக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!!ஆவடி அடுத்த பட்டாபிராமில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, எல்.சி., 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவு பாதையில் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்வே ‘கேட்’ மூடப்பட்டு, மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதனால் சாலையின் இருபுறமும், வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், அவரச ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் சென்று வர முடியாத சூழல் தொடர்ந்து நீடித்து வந்தன.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மத்திய – மாநில அரசுகள் முடிவெடுத்தன. அதன்படி, 2010 -11 நிதியாண்டில் 33.48 கோடி ரூபாய் செலவில், நான்கு வழி சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சென்னை- – திருத்தணி நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.

சென்னை- - திருத்தணி நெடுஞ்சாலை -ஒரு வழி பாதை விரைவில் அமைக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!!முந்தைய திட்டத்தை, ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் மறு ஆய்வு செய்ததால், திட்ட மதிப்பீடு 52.11 கோடி ரூபாயாக உயர்ந்தது. மறுபுறம், ஆறு வழி சாலை மேம்பாலம் அமைக்க முடிவாகி, கடந்த 2018 ல் பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு முடிக்க திட்டமிட்டு, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

அதன்படி,சென்னை,அம்பத்தூர்,ஆவடியிலிருந்து,திருநின்றவூர்,திருவள்ளூர்,திருத்தணி மற்றும், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. அவை, பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே, தண்டரை — பூந்தமல்லி பிரதான சாலை வழியாக வண்டலுார்-மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு சென்று,நெமிலிச்சேரியில் கீழிறங்கி சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை வழியாக,திருநின்றவூர், திருவள்ளுவர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தன.

சென்னை- - திருத்தணி நெடுஞ்சாலை -ஒரு வழி பாதை விரைவில் அமைக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!!இதனால், சுமார் 6 முதல் 8 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 5 வருடங்களாக நேர விரயம், எரிபொருள் விரயமும் ஏற்பட்டு பொது மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றால் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டு, தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில்,செப்டம்பர் மாதம் மேம்பாலத்தின் ஒரு வழி பாதை திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருந்தார். தற்போது வரை அவர் சொன்னது போல் எந்த பணிகளும் முடியவில்லை.

சென்னை- - திருத்தணி நெடுஞ்சாலை -ஒரு வழி பாதை விரைவில் அமைக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!!இந்த நிலையில், இன்று காலை மேம்பாலம் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கண்டிப்பாக அக்டோபர் மாதம் ஒரு வழி பாதை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது, ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

MUST READ