ஆவடி அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுதுகோல், பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை திருநின்றவூர் திமுக மாணவர் அணி ரமேஷ் குமார் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முகதோற்ற முகமூடி அணிந்து, திருநின்றவூர் நகர மன்ற தலைவர் உஷாராணி, மற்றும் நகர செயலாளர் தி.வை. ரவி, அவைத்தலைவர் ஜே.அன்பழகன், மற்றும் வார்டு செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு தேர்வுக்கான உபகரணம் மற்றும் இனிப்புகளை வழங்கி தேர்வை எந்த பயமும் இன்றி சிறப்பான முறையில் எழுதிட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.