மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் ஆவடியில் நடைபெற்றது.
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்த இயந்திர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு தன்னை தானே உணரவும், தன் வாழ்க்கை இன்னல்களில் இருந்து விடுபட்டு தான் ஒரு சாட்சியாக மற்றவர்களுக்கு வாழ, யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு பொறுமையோடு இருங்கள் எனும் தலைப்பில் தொடர்ந்து உலகம் முழுவதும் சுமார் 6000 மாநாடுகள் நடைபெற உள்ளன எனவும், இந்தியாவில் மட்டும் 17 மொழிகளில் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் 74 மாநாடுகள் நடத்தப்படும் என யெகோவாவின் சாட்சிகளின் பிரதிநிதி பேச்சாளர் மனோஜ் சாக்கோ தெரிவிக்கின்றார்.
மேலும் இந்த மூன்று நாள் மாநாட்டில் கடைசி இரண்டு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பொறுமையின் நிகழ்வை குறித்து எடுக்கப்பட்ட வீடியோ படங்களை மக்களுக்கு ஒளிப்பதிவு செய்து காண்பித்து பொறுமையின் தன்மையை குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.மேலும் பொறுமை என்பது ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்த விரும்பும் ஒரு அழகான குணம் என மனோஜ் சாக்கோ தெரிவிக்கிறார்.
மனோஜ் சாக்கோ
யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி கூறுகையில், யெகோவாவின் சாட்சிகள் 100 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள விளையாட்டு அரங்கங்கள், காட்சி அரங்கங்கள், மாநாட்டு மையங்கள், மற்றும் திரையரங்குகளில், மாடுகளை நடத்தி வருவதாக தெரிவித்தார், மேலும் தற்போது ஆவடியில் நடந்து வரும் இந்த மாநாடு மீண்டும் இந்த அக்டோபர் மாதம் 20-22 ஆகிய தேதிகளிலும், மற்றும் 27-29 ஆகிய தேதிகளிலும் இம்மாநாடு நடைபெறவுள்ளதாகவும், இம்மாநாட்டில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும், மற்றும் எவ்வித பாகுபாடும் இல்லை எனவும் தெரிவித்து, அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.