Homeசெய்திகள்ஆவடிஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

-

- Advertisement -

ஆவடி ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்ஆவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கோவில் புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவில் கும்பாபிஷேகம் செய்வது குறித்தும் மற்றும் கோவிலை சுற்றி மதில் சுவர் அமைத்தல் குறித்தும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்னதானம் வழங்கிட மண்டபம் அமைத்தல் குறித்தும் கலந்து ஆலோசனை நடைபெற்றது.

ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்தற்போது இந்த கோவில் இந்து அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோவில் உண்டியலில் சேகரித்த பணம் 60 லட்சம் இந்து அறநிலையத்துறை இடம் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கும்பாபிஷேகம் செய்யவும், கோயிலை புதுப்பித்தல் பணி செய்யவும், ஊர் பொதுமக்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் கோயில் பணிக்காக நிதி ஒதுக்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி இரண்டரை லட்சம் ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிக்கும் வாக்குவாதம் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

இக்கோவிலின் உண்டியலில் சேகரிக்கப்பட்ட பணம் ₹60 லட்சத்திற்கும் மேல் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் இருந்து கோவிலுக்கு நிதி ஒதுக்கி கோவில் பணியை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்கோவில் பூக்கடை வியாபாரி கன்னியம்மா ஆக்ரோசமாக பேசுகையில், அம்மா பணத்தை அம்மாவிற்கு செலவு செய்வதில் இவர்களுக்கு என்ன? கும்பாபிஷேகம் செய்து 15 வருடங்களுக்கு மேலாக ஆகிறது. பணத்தை மட்டும் வந்து எடுத்து செல்கின்ற நிர்வாகிகள் எங்களுக்கு வேண்டாம். கோவிலை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் நகை பணம் வெள்ளி என அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கை இட்டு செல்கின்றனர். அந்த பணம் எல்லாம் எங்கே போனது? என ஆக்ரோஷமாக பேசிய கன்னியம்மா அவர்களுடைய கோரிக்கையாக கோவில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் எனவும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

MUST READ