ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளது.பள்ளி குழந்தைகள் செல்வதால் விரைவில் சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் W-29 ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைந்துள்ளது, இதன் முன்புறம் அமைந்துள்ள கம்பங்களில் அமைந்திருக்கக் கூடிய மின் கம்பிகள் மீது காவல் நிலையத்தில் வளர்ந்து நிற்கக்கூடிய மரங்கள் மின் கம்பிகளின் மீது சாய்ந்து மின் கம்பிகள் எப்பொழுது வேண்டுமானாலும் அருந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மரங்களின் வாயிலாக மின்சாரம் பாய்ந்து காவல் நிலையம் வருபவருக்கு மின்சாரம் தாக்கும் அபாய நிலையும் உள்ளது.
இதனை அனைத்து மகளிர் காவல் நிலையமும் கண்டு கொள்ளவில்லை, மின்சார வாரிய துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை, இவ்வழியாக அருகில் அமைந்திருக்க கூடிய அரசு பள்ளி தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.
கணவரின் உடலை எப்பாடியாவது கொண்டு வந்து தாருங்கள் – மனைவி கதறல்
எனவே மின்வாரியத்துறை கம்பிகளின் மீது படர்ந்துள்ள மரங்களை அகற்றி சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையம் வரும் புகார்தாரர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் செல்வதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமுன் காலதாமதம் இன்றி சீர் செய்து மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.