Homeசெய்திகள்ஆவடிஆவடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, தடுப்பு பணிகள் - ஆணையர் கந்தசாமி பேட்டி

ஆவடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, தடுப்பு பணிகள் – ஆணையர் கந்தசாமி பேட்டி

-

ஆவடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, தடுப்பு பணிகள் - ஆணையர் கந்தசாமி பேட்டிஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்தும் தடுப்பு பணிகள் குறித்தும் ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் பேட்டி அளித்துள்ளார்.

ஆவடி அருகே பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. பலர் ‘டெங்கு’ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவின் தலைநகராக ஆவடி மாறி வருவதினால்  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறிவரும் நிலையில், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கந்தசாமி அளித்த பேட்டியில்,
ஆவடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, தடுப்பு பணிகள் - ஆணையர் கந்தசாமி பேட்டிஆவடி மாநகராட்சியில்,10 பேர் ‘டெங்கு’வால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் ‘டெங்கு’ பாதிக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ‘டெங்கு’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விழிப்புணர்வு செய்த பிறகு, கொசு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கான சூழல் ஏற்படுத்துபவர்களுக்கு, அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கு முன், வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

தமிழகத்தில் மேலும் 2 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள்!

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீட்டையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொசு மருந்து தெளித்தால் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ