ஆவடி அருகே மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறிய போது தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி
கும்முடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(38). இவர் திருமுல்லைவாயில் சோழம்பேடு தாமரை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார் .நேற்று திருமுல்லைவாயில் செந்தில் நகரில் மின்தடை ஏற்பட்டதால் அதனை சரிசெய்ய வேண்டி பாலாஜி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு ஏணி மூலம் மின்கம்பத்தில் ஏற முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு சென்ற திருமுல்லைவாயில் போலீஸார் பாலாஜி உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.