மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா – 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு உருவாக்கி புதிய ராபா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனையில் இடம் பெற்றது.
ஆவடி அருகே அன்னம்பேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஹோப் மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சுமார் 50 பேர் சிறப்பு பயிற்சி வகுப்பில் பயின்று வரும் வளாகத்தில் பொங்கல் விழா ( 2025) பெற்றது. இதில் விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த சுமார் 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற வண்மையமான “பொங்கல் திருவிழா ” கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தாரை, தப்பாட்டம், சிலம்பம், கயிறு இழுத்தல், மயில் ஆட்டம், கரகாட்டம், நாட்டுப்புற பாடல்கள், நடனம் என சுமார் 100 நாட்டுப்புற கலைஞர் பங்கேற்ற தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மனவளர்ச்சிக் குன்றிய மாணவ, மாணவியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தைப்பொங்கலிட்டு உற்சாகமாகக் கொண்டாடினர். நிகழ்ச்சியின் சிறப்பாக ஹோப் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலமானது காண்போரை பிரமிக்க வைக்கும் வகையில் வண்ண வண்ண கோலப்பொடிகளைக் கொண்டு அமைத்தது ராபா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது முக்கிய சிறப்பம்சமாகும்.
இதில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்புசை கலைஞர்களின் குத்தாட்டம் என கலை கட்டிய பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் காண்போர் கண்களை கவர்ந்து இழுத்தது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் ஆட்டம் அனைவரின் கண்களை வெகுவாக ஈர்த்தது. தஞ்சாவூர் பொம்மையை போல் வேடம் அணிந்த பெண் நடன கலைஞர் ஒருவர் பறை இசைக்கு போட்ட நடனம் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அது மட்டுமல்ல அது மலர் கம்பம் மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
மேலும் சினிமா கலைஞர்களான, வடிவேலு, தனுஷ், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் தோற்றத்தைக் கொண்டவர்கள் கூட்டத்தில் வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் முதியவர்களுடன் குஷியாக நடனம் போட்டு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தவர்களிடம் கலந்துரையாடி அவர்களையும் குத்தாட்டம் போட வைத்தனர் என்பது குறுப்பிடத்தக்கது.