சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் பார்வையிட்டார்.
அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பார்வையிட்ட போது அப்பகுதி மக்கள் பலர், மாநகராட்சி அதிகாரிகள் போனை எடுப்பதில்லை எனவும், மழைநீர் சூழ்ந்துள்ளதால் வெளியே செல்ல முடியவில்லை எனவும், மின்சாரமும் இல்லாத நிலையில் மின்வாரிய ஊழியர்களும் போனை எடுப்பதில்லை எனவும் முறையிட்டனர். இதனால் அவர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் அறிவுறுத்தினார்.
மேலும், இப்பகுதியில் இருக்கக்கூடிய மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரட்டூர் பகுதியில் இருக்கக்கூடிய மழைநீர் செல்வதற்கு முறையான கட்டமைப்போடு மழைநீர் கால்வாய்களை அமைக்க வழிவகை செய்ய வேண்டும்,
மற்றும் கொரட்டூர் பகுதிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி அலெக்சாண்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.