Homeசெய்திகள்ஆவடிவீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்

வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்

-

- Advertisement -

ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்- வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய  கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள்

வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்

அம்பத்தூர் வட்டத்தில் மொத்தம் 117 ரேஷன் கடைகளில் இன்று டோக்கன் விநியோகம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள 9 ரேஷன் கடைகளில் ஒரு கடைக்கு 1200 டோக்கன் விதம் 10000 டோக்கன் விநியோகம் தொடக்கம்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வட்டத்திற்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.. ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் திருமுல்லைவாயில் கேஷ் பாயிண்ட் வைஷ்ணவி நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை அலுவலகத்திலும் ஆவடி வட்டத்தில் 42 கடைகளில் டோக்கன் விநியோகம் செய்வதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர். இன்று 14ஆம் தேதி முதல் வரும் 17ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் நடைபெறும் என்றும் 17ஆம் தேதிக்குப் பிறகு 6000 ரூபாய் ரேசன் கடையில் வழங்கப்படும் எனவும் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் தேதி நேரத்தில் பொதுமக்கள் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அம்பத்தூர் வட்டத்தில் மொத்தம் 117 ரேஷன் கடைகளில் இன்று டோக்கன் விநியோகம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள 9 ரேஷன் கடைகளில் ஒரு கடைக்கு 1200 டோக்கன் விதம் 10000 டோக்கன் விநியோகம் தொடங்கியது

MUST READ