- Advertisement -
ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், OCF கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த செப்டம்பர்-7ஆம் நாள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு இன்று (22.09.2023) OCF கூட்டரங்கத்தில் மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் திரு.எம்.வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் OCF சார்பாக தலா ரூ15 இலட்சம் வீதம் மொத்தம் ரூ 30 இலட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு.தர்பகராஜ் இ.ஆ.ப., ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் மொய்தின் மற்றும் தூய்மை பணியாளர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.