Homeசெய்திகள்ஆவடிபருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் - சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு

பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் – சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு

-

- Advertisement -

ஏரியில் அதிகரித்திருக்கும் பாசியால் மூச்சுத்திணறி மீன்கள் இறந்திருக்கலாம் என தாவரவியல் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசன் பருத்திப்பட்டு ஏரியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்தித்தாா்.பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் - சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு

மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ” ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரியில் கடந்த சில தினங்களாக டன் கணக்கில் மீன்கள் இறந்து வருகிறது.ஏரியில் கழிவு நீர் கலப்பால் மீன்கள் இறந்து வருவதாக கூறப்படும் நிலையில் சென்னை பல்கலைக்கழக வல்லுனரும், தாவரவியல் முன்னாள் பேராசிரியருமான முனைவர் சீனிவாசன்  ஏரியில் ஆய்வு செய்யதார்.பருத்திப்பட்டு ஏரியில் படகு சவாரி ,பசுமை பூங்கா,யோகா மையம், சிறுவர்கள் விளையாட்டு திடல்,ஏரியை சுற்றி 4கிமீ நடை பாதை உள்ளிட்டவை இருக்கும் சூழலில் மாசடைந்த ஏரி நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த நிலையில் ஆய்வு நடைபெற்றது.

பருத்திப்பட்டு ஏரியில் ஆவடி மாநகரின் வடக்கு பகுதியில் மழை நீர் வடிகால் உள்ளிட்ட கால்வாய் வழியே கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் கலக்கப்படுகின்றது. முறையாக இந்த பணி நடைபெறாததால் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டு மீன்கள் இறந்து போனதாக குற்றம் சாடிய நிலையில் ஏரியின் பல்வேறு பகுதியில் தண்ணீர் மாதிரிகள்  சேகரித்த நிலையில் அதனை ஆய்வு செய்ய சேகரிக்கப்படும் தண்ணீர் மாதிரிகளை சென்னை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்த பின்னர் முறையான அறிக்கை வழங்கப்படும் என முனைவர் சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளாா்.  பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் - சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வுஏரி நீர் முழுவதும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு மீன்கள் இறந்ததாக செய்திகள் வெளியானது. அது உண்மை தான். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் கலப்பதால் இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஏரியில் கலக்கும் கழிவுநீரில் உருவாகும் நன்னீர் பாசி, ஏரியில் படர்ந்து, தண்ணீரில் உள்ள உயிர் வாயு முழுவதும் நன்னீர் பாசி பயன்படுத்தி கொள்ளும். இதனால் மீன்களுக்கு சரியாக உயிர் வாயு கிடைக்காமல் மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதை பயோலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் என கூறுவோம். தற்போது நீரின் மாதிரி சேகரித்து நுண்ணியல் கருவி வாயிலாக ஆய்வு செய்யும் போது நீரில் என்ன கழிவு கலக்கப்பட்டுள்ளது என தெரிந்து விடும். கோடை காலத்தில் நீர் வற்றும் போது இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், சில இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் போது இவ்வாறு நடக்கும்.

இதனால், நாம் வளர்த்து வரும் மீன்கள் அனைத்தும் இறந்து விடும். நீர்நிலைகளில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் கலக்க கூடாது. இது தான் பிரச்சனைக்கு சரியான தீர்வு. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மிகவும் ஆபத்தானது. நீரில் கரிம வளம் அதிகரிக்கும் போது இவ்வாறு நடக்கும். இதை ‘ஆல்கல் ப்ளூம்’ சிவப்பு அலை என்று கூறுவோம். எனவே, நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலக்காமல் தடுக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளாா்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

MUST READ