திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா செல்லும் நெடுஞ்சாலையில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் (எல்சி-2) அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மார்கம் தொடர் ரயில் போக்குவரத்து இயங்கி வருகிறது. அதனால் ரயில்வே கேட் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மூடப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
இப்பிரச்னையை தீர்க்க, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறை மூலம் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டத்தை மறுமதிப்பீடு செய்து, ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம் ஆண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது.
இதனால் சென்னை – திருப்பதி ரேணிகுண்டா நெடுஞ்சாலை இடையே பயணிகள் வாகனங்கள், அரசு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தற்போது பட்டாபிராம் காவல் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருப்பதி ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பட்டாபிராமைக் சேர்ந்த சமூக ஆர்வளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கைகள் விடுத்தும் இன்று வரை பணி நிரைவடையாமல் இருக்கிறது. தற்போது மழைக் காலம் தொடங்கிய நிலையில் பொது மக்கள் மேலும் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 30 ஆம் தேதி தன்னார்வ நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் பணிகள், ஒரு வழிப்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுவரை எம்.எல்.ஏ, நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாக்களித்து சோர்ந்து போன பொது மக்கள், முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு அஞ்சல் அட்டைகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி பணிகளை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து T. சடகோபன் , சமூக ஆர்வலர் கூறியதாவது, பாலத்தின் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் கடந்த 5 வருடமாக மாநகர பேருந்தின் சேவைகள் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் 8 -12 கி.மி தூரம் சுற்றி செல்வதினால் பயண நேரம் அதிகரிப்பதோடு எரிபொருள் விரயமும் கூடுதலாகிறது என்றார்.
பட்டாபிராமில் பிரதானமாக இருந்த பஸ் டெர்மினஸ் 5 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாததால் பேருந்துகளை ஹால்ட் செய்ய முடியவில்லை. மேலும் பேருந்து ஊழியர்களுக்கு கழிப்பிடம் மற்றும் மற்ற வசதிகள் ஏற்படுத்தாமல் உள்ளது. பேருந்தின் சேவைகள் குறைந்துள்ளதற்கு இதுவும் மற்றோரு காரணம் என்றார்.
இவ்வளவு காலமாக பொருத்திருந்த மக்கள், தற்போது முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு அஞ்சல் அட்டைகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்ப முனைந்ததின் காரணம் என்ன ?
பாலத்தின் பணிகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி மற்றும் பணிகளை வேகப்படுத்துவதற்கு வாய்ப்பாய் அமையும் என்று மக்களின் ஆதங்கம்.
பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதினால் , இந்த நான்கு நாட்களில் பெய்த மழைக்கே சேறு சகதியில் மக்கள் வழுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.
தற்போது ஒரு சமூக ஆர்வளராக உங்கள் கருத்து என்ன ?
சர்வீஸ் ரோட்டை போர்கால அடிபடையில் சீரமைக்க வேண்டும், பாது காப்பான பயணத்திற்கு உண்டான வழி வகுக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டை மக்கள் முழுமையாக பயனடையும் வகையில் திட்டமிட்டபடி அகலமாக அமைக்க வேண்டும். இதனை துறை சார்ந்தவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த செந்தூர் ராஜன் கூறியது,
பணிகள் தொடங்குவதற்கு முன்பே சர்வீஸ் ரோடு அமைத்து அதன் பின் பணிகள் மேற் கொள்ளப்படும் என்று ஆரம்பத்தில் தெரிவித்தனர். இது நாள் வரை சரியான சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. அது மட்டுமில்லாமல் எங்களது வாகனங்களை வீட்டின் முன் நிறுத்த முடியாமல் 5 ஆண்டுகளாக வெகு தூரத்தில் பாதுகாப்பு இல்லாமல் நிறுத்தி வருவதாக கூறினார்.
மேலும் நேற்று என் மனைவி கடைக்கு செல்ல வெளியே வந்த போது அவருடைய காலணி சகதியில் சிக்கி சுமார் ஒரு அடி ஆழத்தில் கால் மாட்டி கொண்டு தவித்ததாகவும் தெரிவித்தார்.
இப்படி ஒரு நாள் பெய்த மழைக்கே சாலை புதை குழியாக மாறியுள்ளது என்று சொன்னர். இந்த வேலை ஆரம்பித்த நாளில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெயியே வருவதும்,வீட்டிற்குள் செல்வதும் சவாலாகவே இருந்து வருவதாக கூறினார்.
இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் நேரடியாக தலையிட்டு பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.