Homeசெய்திகள்ஆவடிஅம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

-

நோயற்ற வாழ்வே.!உயிருக்கு உயர்வு.!!டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி  அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

அம்பத்தூர் பகுதியில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, சென்னை பெருநகர அம்பத்தூர் மண்டலத்தில் பணிபுரியும் 1150 தூய்மை பணியாளர்களுக்கு அப்போலோ மருத்துவமனை உடன் இணைந்து  3 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ். கனிமொழி சோமு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஒரு நபருக்கு 8,500 மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்கு 1150 பேருக்கு உயர் தொழில் நுட்பத்தில் உடல் எடை,ரத்த அழுத்தம்,  ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை ஒரே இடத்தில் மருத்துவர் பிரேம் சந்த் தலைமையில் 10 மருத்துவர்கள், உட்பட 40 செவிலியர்கள் மற்றும்  10 தொழில்நுட்ப இன்ஜினியர்கள் என 60 க்கும் மேற்பட்டோர் இந்த 3 நாள் சிறப்பு மருத்துவர் முகாமில் கலந்துகொண்டு முகாமை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் என் எஸ் கனிமொழிசோமு அவர்கள் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்பத்தூர் பகுதியில் 62 ஆவது நிகழ்ச்சியாக இந்த சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலிவுற்றவருக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை தலைவர் கலைஞர் இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். நமக்காக இரவு பகல் பாராமல் நம்மை சுற்றியுள்ள சுகாதார சீர்கேடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்ற தூய்மை பணியாளர்களுக்கு இந்த மருத்துவ முகாம் நடத்துகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதில் மருத்துவர் அணி தலைவராக நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன், என தெரிவித்தார்.

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது இதை ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் உணர்வார். அதனால் தலைவர் தளபதி ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

MUST READ