Homeசெய்திகள்ஆவடிடாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

-

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரியில் தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர் காந்தி மற்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் உலகத்தரம் வாய்ந்த 219 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று கொண்டனர், வேலைவாய்ப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி ஆணையினை அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

இம்முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி கல்வி முடித்தவர், டிப்ளமோ, ஐடிஐ கல்வி முடித்தவர், கலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையல், நர்சிங், மற்றும் மாற்றுத்திறனாளிகள், உட்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது, முகாமில் இலவச உணவு, தேநீர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் அவர்களால் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், அவசரகால மருத்துவ முகாம், தொழில் மேம்பாட்டு முகாம்கள் போன்றவை இடம்பெற்றன.

பேட்டி 1:-
ஜனதுல அஜரா கூறியது:

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நான் ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து வருகிறேன் முருகப்பா பாலிடெக்னிக் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறேன், அரசாங்கம் வேலைவாய்ப்பு தருவதாக அறிவிப்பு வந்தது இதை அறிந்து வந்து எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்று பல்வேறு நிறுவனங்களின் வேலைவாய்ப்பை அறிந்து கொண்டு பயன்பெற்றோம் இதை ஏற்படுத்திக் கொடுத்த அரசுக்கும் எங்கள் கல்லூரிக்கும் நன்றி எனக் கூறினார்.

பேட்டி2:-
மகாலட்சுமி கூறியது:

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்நான் ஆவடியில் இருந்து வந்திருக்கிறேன் இந்த வேலை வாய்ப்பு பற்றி எனது சகோதரி மூலம் தெரிந்து கொண்டேன். நீண்ட நாட்களாக நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு நிறைய நிறுவனங்கள் பங்கேற்றதால் எனக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ள சுலபமாக இருந்தது, மேலும் எனக்கு மூன்று நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பு தருவதாக கூறப்பட்டது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்திய அரசுக்கு நன்றி.

பேட்டி3:-
ரமேஷ் கூறியது:

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நான் ஆவடியில் இருந்து வருகிறேன், நான் முருகப்பா பாலிடெக்னிக்-ல் படித்தேன், அவர்கள் எனக்கு தெரிவித்து இந்த முகாமில் கலந்து கொண்டு பணி அணை பெற்றேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆவடியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்கான ஆணையை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.

MUST READ