ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய நடிகர் மோகன்
நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடபட்டது.இதில் நடிகர் மோகன் பங்கேற்று முதியோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கு உணவு உடை இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.மேலும் சிறு குழந்தைகளுக்கு பட்டாசு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார், அவருக்கு ரசிகர் ஒருவர் ஏலக்காய் மாலை அணிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.ஒரு போதை ரசிகர் ஒருவர் நடிகர் மோகனுடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அடம் பிடித்தார்.இதனை தொடர்ந்து நடிகர் மோகன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அவர் மீது கை பிடித்ததற்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்.இதனால் அந்த குடிமகன் ரகளையில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தளபதி 68 படப்பிடிப்பு துவக்க பட்டுள்ளது.தளபதியுடன் நடிப்பு அனுபவம் பிரமாதமாக உள்ளது.இப்போது திரை உலகம் சிறப்பாக உள்ளது.தளபதி 68 க்கு பிறகு என்ன என கேட்ட செய்தியாளர்களிடம் 69 என பதிலளிக்க சிரிப்பலை எழுந்தது.
தளபதி 68ல் தாய்லாந்தில் நடைபெறும் படப்பிடிப்பில் தனது பகுதியை நிறைவு செய்துவிட்டு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.அந்த கால திரைப்படமும் இப்போது உள்ள திரைப்படம் குறித்த நீண்ட கேள்வியை செய்தியாளர் கேட்க என்ன கேள்வி என புரியவில்லை என கலாய்த்தார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் 68 திரைப்படம் குறித்து அனைத்து விதமாக கூறவேண்டுமா என ஆவேசம் அடைந்தார்.
தனது ரசிகர்கள் தான் எனது முதுகெலும்பு அவருகளுக்காகதான் நான் மீண்டும் திரைப்படம் நடிக்க வந்துள்ளேன்,அவர்கள் ஆசையை நிறைவேற்றும் விதமாக நடந்துகொள்வேன்,ஏமாற்றும் வகையில் இருக்கமாட்டேன் என கூறினார்.