Homeசெய்திகள்ஆவடிஆவடி சுற்றுவட்டார மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு

ஆவடி சுற்றுவட்டார மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு

-

சென்னை பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது- ஜொலிக்கும் மேம்பாலத்தின் பருந்து பார்வை காட்சிகள்..

ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பட்டாபிராம் மேம்பாலம் இன்று மாலை
திறக்கப்பட உள்ளது , திறப்பு விழாவிற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேம்பாலம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு ஒளிரும் மின்விளக்குகளால் மேம்பாலம் ஜொலித்து வருகிறது. இது அப்பகுதி மக்களின் கவனம் பெற்றுள்ளது. இதன் பருந்து பார்வை காட்சியில் இரவு நேரத்தில் ஒளிரும் விளக்குகளால் ரம்யமாக காட்சியளிக்கிறது..

இந்த மேம்பாலத்தை இன்று மாலை அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளனர்..

இந்த மேம்பாலம் திறப்பதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பாதையை பயன்படுத்தி சென்று வந்த கார்,வேன், அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் சுலபமாக திருநின்றவூர் செவ்வாப்பேட்டை திருவள்ளூர் திருத்தணி வழியாக திருப்பதி சுலபமாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..

MUST READ