ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு !
ஆவடி மாநகராட்சியில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் 90% முடிவடைந்து இருக்கும் நிலையில் புதிய மருத்துவமனையில் அமைத்து இருக்கக்கூடிய அனைத்து அறைகளிலும் சுகாதாரத்துறை செயலர் ஆய்வு செய்தார். பின்பு ஒவ்வொரு மருத்துவ அறைகளிலும் வைக்கக்கூடிய மருத்துவ உபகரணங்கள், மூன்று அறுவை சிகிச்சை அரை, எக்ஸ்ரே மையம், ரத்தப் பரிசோதனை மையம், நோயாளிகள் அமரும் அறைகள் மற்றும் இருக்கை, அவசர ஊர்திகள் நிற்கும் இடம் போன்ற அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய மருத்துவ கட்டிடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். அதே வளாகத்தின் பின்புறம் இயங்கி வரும் பழைய மருத்துவ கட்டிடத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளி அறைகளிலும் ஆய்வு செய்து அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.
சென்னையில் டெங்க காய்ச்சல் பெருகி வருவதை தடுக்க அரசு எடுத்துள்ள முயற்சியினை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி ,ஊராட்சி- களுக்கு வீடுகள் , தொழில் ,வணிகம் புரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் ஆய்வு செய்யுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி கொசு அதிகரிக்கும் நிலை கானப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்தார்.
வெளியே வைக்கப்படும் கிரைன்டர்கள், வண்டிகளின் டயர்கள் , பிலாஸ்டிக் பைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி கொசுகள் பெருகுவதற்கான வாய்ப்பு பெரிதும் உள்ளது எனவும் அறிவுறித்தினார்
மேலும் பொது மக்களுக்கு காய்ச்சல் பற்றி விளக்கம் அளித்த அவர், தற்போது வரும் காய்ச்சல் மழைக்காலங்களில் வழக்கமாக வரும் காய்ச்சல் தான், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரின் அலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும், வீட்டில் இருந்த படி சுயமருந்து எடுத்து கொள்வது என்பது கூடாது. ஒரு வேலை இரண்டு – மூன்று நாட்கள் நீடித்தால் மருத்துவரின் ஆலோசனையின் படி பரிசோதனை செய்து கொள்ளுமாறு விளக்கினார்.
தற்போது தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை இல்லை எனவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. புதிதாக திறக்கப்பட உள்ள இந்த மருத்துவமனையிலும் இதே நிலை நீடிக்குமா? அல்லது தேவைக்கேற்ப மருத்துவர் செவிலியர் நியமிக்கப்படுவார்களா?
புதிதாக திறக்கப்படும் மருத்துவமனையில் தற்போது உள்ள மருத்துவர் செவிலியர் பற்றாக்குறை நீக்கப்பட்டு தேவைக்கேற்ப மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தார்.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இதுவரை முறையான தங்கும் வசதி மருத்துவமனை வளாகத்தில் அமைத்து தரவில்லை என புகார் வந்துள்ளது, இவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுமா?
இதனை குறித்து ஜெ.டி யிடம் ஆலோசனை செய்து அவர்களின் பரிந்துரை படி அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வில் ஆவடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காவலன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.