Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே கபடி திருவிழா

ஆவடி அருகே கபடி திருவிழா

-

- Advertisement -

ஆவடி அருகே கபடி திருவிழா

ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM முரளி மெமோரியல் கபடி குழு மற்றும் ஊர்பொது மக்கள் இணைந்து நடத்தும் 47 ஆம் ஆண்டு கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மிட்டனமல்லி செல்லியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

பங்கேற்கும் அணிக்கு நுழைவு கட்டணம் 1000 ரூபாய் நிர்ணயக்கப் பட்டுள்ளது.

இந்த போட்டிகளை நடத்த பொதுமக்களிடம் அன்பளிப்பாக பெறப்பட்ட தொகையை போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரையும் கௌரவப் படுத்தும் வகையில் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

2010ல் கபடி போட்டியில் கோப்பையை வென்ற மத்திய தபால் துறை அரசு ஊழியர் சூர்யா மற்றும் வினோத் உள்ளிட்டோர் டாஸ் போட்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

போட்டியை மிட்னமல்லியை சேர்ந்த வழக்கறிஞர் பெ.வினோத், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

MUST READ