Homeசெய்திகள்ஆவடிஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

ஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

-

ஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கினர்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த நினைவு தினத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

ஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

இந்நிலையில் ஆவடி போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு போற்றும் வகையில் இன்று மதியம் ஆவடி பேருந்து நிறுத்தத்தில் பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

ஆக.14-ல் குருப்-2 ஏ பதவிகளுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

முன்னதாக ஆவடி பணிமனை போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க ஊழியர்கள் ஒரு நிமிடம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் பெரம்பூர் த.ஆறுமுகம்,துணைத் தலைவர் பி டி சி எஸ். ரவி,ஆவடி மாநகர 5ஆவது வார்டு வட்ட கழக செயலாளர் பு.கிருஷ்ணமூர்த்தி,தொ.மு.ச.சுரேஷ், தொ.மு.ச.ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

MUST READ