சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்கின்றனர். அந்த காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
பள்ளி வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை மாணவர்கள் பிளாஸ்டிக் பக்கெட் கொண்டு தொட்டியின் மீது ஏறி சுத்தம் செய்யும் காட்சி தற்போது வெளியாகி வருகிறது. அச்சம் இல்லாமல் தடுப்பு சுவர் இல்லாத மொட்டை மாடி மீது நின்று தொட்டியின் மீது ஏறி சுத்தம் செய்யக்கூடிய வீடியோவானது வெளியாகி இருக்கிறது. அந்த மாணவர்கள் நீர்த்தொட்டி மீது ஏறி சுத்தம் செய்கின்றனர்.
அவர்களுக்கு மேல் ஒரு மின் கம்பி ஒன்று செல்கிறது உயிர் பயம் இல்லாமல் அச்சமில்லாமல் சுத்தம் செய்து வருகின்றனர். அந்த மாணவர்கள் தலைமை ஆசிரியர் தான் சுத்தம் செய்ய சொன்னார்கள் என்று சொல்லக்கூடிய ஆடியோ இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.