Homeசெய்திகள்ஆவடிஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

-

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

ஆவடி காமராஜர் நகர் கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மனித சடலம் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள  கூவம் ஆறு, திருவள்ளூர், வேப்பம்பட்டு, பட்டாபிராம், காமராஜர் நகர், பருத்திப்பட்டு, வழியாக சென்று கடலில் சேர்கிறது.

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

இந்நிலையில் ஆற்றோர பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில் கடந்த மூன்று தினங்களாக துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளனர். கூவம் ஆற்றில் மிதந்த சடலம் ஆடா அல்லது மாடா மனிதனா என்று தெரியாத நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் துர்நாற்றம் அதிக அளவில் வீசுவதால் சுவாசிக்க முடியாத நிலையில் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சடலம் நீரில் அழுகி துர்நாற்றம் வீசும் நிலையிலும் மற்றும் அடையாளம் தெரியாத நிலையில் உள்ளதால் சடலத்தை மீட்க மிகவும் சிரமப்பட்டனர். அந்த சடலம் ஆண் என்று அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

சடலத்தை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மர்மமான முறையில் சடலம் ஆற்றல் மிதந்து கொண்டிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆவடி T6 காவல் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் நீரில் சடலமாக மிதப்பவர் குளிக்கும் போது தவறுதலாக இறந்தாரா அல்லது வேறு எவராலும் கொலை செய்யபட்டு நீரில் வீசப்பட்டுள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேட்டி:

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

பேபி ஷாலினி கூறியது- நான் காமராஜர் நகர் பகுதியில் 10 வருடங்களாக வசித்து வருகிறேன். கூவம் நீரில் மிதந்த சடலம் ஆடா, மாடா, மனிதனா என்று தெரியவில்லை. இன்று தான் உறுதி ஆனது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

MUST READ