Homeசெய்திகள்ஆவடிமிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும்...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

-

அம்பத்தூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பொறுப்பு அமைச்சர்கள் ஆய்வு செய்து மீட்பு பணிகள் மேற்கொள்வதோடு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட வார்டு 86வது வார்டு அத்திப்பட்டு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் கமலகண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு நேரில் சென்று 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி மளிகை தொகுப்பு அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதேபோல், 84வது வார்டில் பகுதி கழக செயலாளர் எம்டிஆர் நாகராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.  இதனை தொடர்ந்து 90வது வார்டில் பகுதி கழக செயலாளர் டிஎஸ்பி ராஜகோபால் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். முன்னதாக அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த அவர், விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பகுதி கழக செயலாளர் டி எஸ்பி ராஜகோபால், எம்டிஆர் நாகராஜ், வட்ட கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் இதனை தொடர்ந்து சன் செய்திக்கு சிறப்பு தகவல் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மழை பெய்து ஓய்ந்து தற்போது அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சரை நியமித்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் தொடர்ந்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, நீர் வடிந்த சூழ்நிலையில் அந்த கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அதனால் தான் நீர் வழிந்து தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொடுத்து கொண்டே வருகிறோம், மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன, தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து பணியாட்களை பெருமளவில் அமர்த்தி பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் மக்களைப் பொருத்தமட்டில் அனைவரும் திருப்தியாக உள்ளனர், தொடர்ந்து பணிகளை தீவிர படுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

MUST READ