Homeசெய்திகள்ஆவடிஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார்...

ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

-

ஆவடி HVF(Heavy Vehicle Factory) தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முறியடித்துள்ளார்.

ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் பாதுகாப்புத்துறைக்கு தேவையான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்தபோது அதற்கு ஆவடி மக்கள் தாமாக முன் வந்து எச்.வி.எஃப் தொழிற் சாலைக்கு தேவையான நிலங்களை வழங்கினார்கள்.

அதற்கு கைமாறாக HVF (Heavy Vehicle Factory)  நிர்வாகம் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஆவடி சுற்று வட்டார பகுதி குழந்தைகள் படிப்பதற்காக கல்விக்கூடங்களை உருவாக்கியது.

ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

அதில் முக்கியமானது  இங்கிலீஷ் மீடியம் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தின் கீழ் விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளியும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் விஜயந்தா மாடல் பள்ளியும் நிறுவப்பட்டது.

தற்போது மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான முதற்கட்ட முயற்சியில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை வினியோகம் செய்ய மறுத்துள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மாநில பாடத்திட்டத்தில் உள்ள மாடல் பள்ளியை சிபிஎஸ்இ பாடத்திற்கு  மாற்றுவதாகவும் தமிழ் வழி கல்வி பாடத்திட்டத்தை கை விடுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழ் பாடத்திட்டத்தில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் மத்திய மாநில அரசுத் துறையில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு 100 சதவீதமும் இந்த ஆண்டு 100 சதவீதமும் தேர்ச்சி பெற்று  சாதனை படைத்து வரும் பள்ளியை மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு மாநிலக் கல்வி முறையை முடக்க பள்ளி நிர்வாகம் சதி திட்டத்தில் ஈடுபட்டது.

மேலும் கடந்த ஆண்டு பள்ளி வளாகத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்டித் தருகிறேன் என்று மாணவர்களிடம் கட்டிட நிதியை பள்ளி நிர்வாகம் வசூல் செய்தது. ஆனால் புதிய வகுப்பறைகள் ஏதும் கட்டாமல் வசூல் செய்யப்பட்ட நிதியில் சுமார் 30 லட்சத்தை இந்த நிர்வாகம் கையாடல் செய்து வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருக்கிறது. இந்த மோசடியை மறைக்கவே பள்ளியை மூடுகின்ற சதியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதாக ஆவடி HVF (Heavy Vehicle Factory) தொழிலாளர் முன்னேற்ற சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இதனை ஆவடி HVF (Heavy Vehicle Factory) தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.தமிழர்களுக்கு எதிரான இந்த போக்கை உடனடியாக கைவிட்டு மீண்டும் மாநில பாடத்திட்டத்தில் மாணவர்கள் பயில 11 ஆம் வகுப்பு சேர்க்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் கவனத்திற்கு நாசர் கொண்டு சென்றார்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/tamilnadu-weather-update-6/84376

உயர் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு  விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழி கல்வியை மீண்டும் நடைமுறை படுத்த  உத்தரவிட்டார்.தற்போது மீண்டும் விஜயந்தா மாடல் பள்ளியில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

MUST READ