ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வசந்தா பல மாதங்களாக மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரு தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி வசந்தா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த சங்கர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று இரவு, வசந்தாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, வசந்தா, சங்கர் இருவரும் இறந்து கிடந்தனர். போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
#Breaking: தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: நூலிழையில் தப்பிய துணை முதல்வர்-டிஜிபி..!