Homeசெய்திகள்ஆவடிஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

-

ஆவடி அருகே 1கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர்

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

1800சதுர அடியில் இரண்டு அடுக்கு கட்டிடமாக உருவாக உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூமி பூஜை இன்று காலை நடந்தது.

ஆவடி துணை ஆணையர் அலுவலகம் அருகில் செயல்ப்பட்டு வந்த சார் பதிவாளர் அலுவலகம் தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் பட்டாபிராம் அண்ணா நகரில் அருகே இயங்கி வருகிறது. இந்த நிலையில் நிரந்தரமாக சார் பதிவாளர் அலுவலகத்தை ஒரே இடத்தில் அமைக்க பொது மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் ஆவடி பருத்திப்பட்டு ஆர் டி ஓ அலுவலக பின்புறம் உள்ள அரசு நிலத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் அமைக்க 1கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்து அரசானை வெளியிட்டது.

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

இந்த நிலையில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் அமைக்கும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு. நாசர் கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டினார். 1800 சதுர அடியில் இரண்டு அடுக்கு கட்டிடமாக அமைக்கப்பட உள்ள சார் பதிவாளர் அலுவலகம் கட்டிட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகரச் செயலாளர் சன் பிரகாஷ், ஆவடி பகுதி செயலாளர் பேபி சேகர், மாமன்ற உறுப்பினர் 48 வார்டு கார்த்திக் காமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

MUST READ