ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 6ஆம் தேதி முதல் புதிதாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 66006, வரும் 6ஆம் தேதி முதல் ஆவடியில் இருந்து சென்னை மூர் மார்க்கெட்டிற்கு மாலை 6.10 மணிக்கு புதிதாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மின்சார ரயில் ஆவடியில் மாலை 6.10க்கு புறப்பட்டு, மாலை 6.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் போய்ச்சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 6ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே செல்லும் மின்சார இரயில் 12 பெட்டிகளாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை – சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் வரும் 7ஆம் தேதி முதல் 12 பெட்டிகளாக இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.