ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலையாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில் கடைக்காரர்கள் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்களுக்கும் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்ற ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் மதிவாணன் திடீரென்று ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனால் அப்பகுதி கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் நேற்று ஜேசிபி இயந்திரத்துடன் மாநகராட்சி ஊழியர்களும் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றினர்.
ஆக்கிரமிப்பு அகற்றிய பின் வெள்ளிக்கிழமை என்பதால் சிவன் ஆலயத்திற்கும் பச்சையம்மன் ஆலயத்திற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்த ஒரு போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
பின்பு அனைத்து கடை உரிமையாளர்களை அழைத்து இதற்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி இதற்கு மேல் ஆக்கிரமிப்பு செய்தால் உங்கள் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.