Homeசெய்திகள்ஆவடிபழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல - இயக்குனர் சுசீந்திரன்

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல – இயக்குனர் சுசீந்திரன்

-

- Advertisement -

ஆவடியில் நடைபெற்ற மெய் சர்வதேச குறும்பட திருவிழாவில் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல - இயக்குனர் சுசீந்திரன்பழையது புதியது என்பது முக்கியமல்ல, கதை களத்திற்கு ஏற்றார் போல் தலைப்பு அமைகிறது – பழைய பெயரை சூட்டும் போது தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்றால் எந்த பிரச்சினையும் இல்லை என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல - இயக்குனர் சுசீந்திரன்திரைப்படம் ஹிட் ஆக வேண்டும் என்று தான் பழைய திரைப்படத்தின் பெயரை சூட்டுகின்றனர்,வெற்றி பெற்ற படங்களின் பெயர்களை வைப்பது பேஷன் ஆகி உள்ளதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மெய் சர்வதேச குறும்படம்  திருவிழா நடைபெற்றது. தமிழ்,இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட குறும்படங்களை கல்லூரி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர் குறிப்பாக வினோதமான, விசித்திரமான பெயர்கள் கொண்டதாக இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த  கல்லூரி மாணவர்கள் படைப்பில் உருவான தமிழ் திரைப்படங்களான தொலைந்த புன்னகை, பாஸ், புதியதொடக்கம், ரணம், அறிவு, சூப்பர் ஹீரோ, நேர்காணல், அதிகாரம், நீங்காத ரீங்காரம், கயமை, கரூ, வினை, கதிரவன், துணை, நான்காவது சுவர், கொரோனா,பிரேதம் , 1ஆம் தேதி, வறுமையிலும் நேர்மை, நான் யார், பிளான் -பி,என தமிழ் பெயர்களில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் விருந்தினர்களின் கண்களுக்கும் சிந்தனைக்கும்  சவால் விடும் வகையில் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சுவாரசியமான குறும்படங்களை கல்லூரி மாணவர்கள் இயக்கி காட்சிபடுத்தினர்.

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல - இயக்குனர் சுசீந்திரன்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் ராஜேஷ் சுசீந்திரன், சக்தி வேலன், சத்யா பொன்ராம், செழியன், கோபி, ஜெயசீலன் நடிகர்கள் அப்புகுட்டி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சினிமா இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு குறும்படங்களை பார்த்து முதல் மூன்று சிறப்பு குறும்படத்தை தேர்வு செய்தனர்.

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல - இயக்குனர் சுசீந்திரன்வெற்றி பெற்ற ஒன்று முதல் மூன்று வரை தேர்வு செய்யப்பட்ட குறும்படத்திற்கு முதல் பரிசாக 1 லட்சம், 2ஆம் பரிசாக 50,000 மற்றும் 3ஆம் பரிசாக 30,000 என ரொக்க பணம் சான்றிதழ் மற்றும் பரிசுகோப்பைகள் வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பிரபல இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில்

பராசக்தி பெயர் விவகாரம் ஏற்கனவே வெளிவந்த பராசக்தி தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாக அனுமதி வாங்கி இருக்க வேண்டும். அவ்வாறு வாங்கி இருந்தால் பிரச்சனை இல்லை.  திரைப்படங்களுக்கு தலைப்பு பற்றாக்குறை என்பது இல்லை கதைக்கு ஏற்றார் போல் பொருத்தமான பேரை சூட்ட நினைக்கும் போது தேர்வாகும் பெயர் கதைக்கு கச்சிதமாக அமைகிறது அது பழைய பெயரோ புதிய பெயரோ கதை களத்திற்கு பொருத்தமாக அமையும் பெயர்தான் சூட்டப்படுகின்றது வேறு எந்த காரணமும் அல்ல.

தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் முடிந்தவரை புதிய பெயர்களை திரைப்படத்திற்கு சூட்டினால் எந்த பிரச்சினையும் இல்லை சொந்தமாக பெயர் வைக்க  வேண்டும். பெயர்களை புதிதாக படைக்க வேண்டும். திரைப்படம் ஹிட் ஆக வேண்டும் என்று தான் பழைய திரைப்படத்தின் பெயரை சூட்டுகின்றனர். ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் பெயர்களை வைப்பது பேஷன் ஆகி உள்ளது. மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடிவதால் பழைய பெயரை வைக்கின்றனர் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்றால் புதிய பெயர்களை வைத்தால் நல்லது என்று கூறினார்.

MUST READ