Homeசெய்திகள்ஆவடிமழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

-

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட பாலவேடு முதல்நிலை ஊராட்சியில் காமராஜர் நகர் பகுதியில் வீட்டைச் சுற்றி  மழைநீர் சூழ்ந்து மூதாட்டி ஒருவர் அவதிப்படுகின்றார். பலமுறை இப்பகுதி மக்கள் மழை நீர் வடிகால்வாய்  வேண்டுமென்று ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இதுவரை கால்வாய் அமைக்காமல் உள்ளது. ஆகவே மழைக்காலங்களில் மழை நீர் செல்ல முறையான கால்வாய் இல்லாத காரணத்தினால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

எனவே அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மழைக் காலங்களில் விஷப் பூச்சிகள்  வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக  ஊராட்சி நிர்வாகம் போதிய ஏற்பாடு செய்ய வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ