Homeசெய்திகள்ஆவடிஅறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்

-

ஆவடி அடுத்த பட்டாபிராம் அன்னமேடு கிராமத்தில் இயங்கி வரும் ஹோப் பொதுநல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு  அறிவு சார் பயிற்சிகளை வழங்கி வருகிறது.  இந்த நிலையில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்இதில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர், பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தி உள்ள திட்டங்களின் கண்காட்சி, ஹோப் ஆட்டிசம் மாணவர்களால் வரைந்த 101 சுதந்திர தியாகிகளின் ஓவிய கண்காட்சியினை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன் இந்த ஓவியங்கள் ஹோப் ஆட்டிசம் மாணவர்களால் வரையப்பட்டதையும் அவர்களின் திறமை RAABA BOOK OF WORLD RECORDS-ல் இடம் பெற்றுள்ளதையும் தெரிவித்தனர்.

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்இதனை தொடர்ந்து மேடையில்  ஹோப் ஆட்டிசம் மாணவன் விஷாலின் ட்ரம்ஸ் வாத்தியங்களை 6 மணி நேரம் இடைவிடாத ட்ரம்ஸ் வாத்திய தனித்திறமை, “சர்வதேச உலக சாதனை புத்தகத்தில்” இடம் பிடித்த நிலையில்  விஷாலை பாராட்டி பரிசு வழங்கினார். அதேபோல் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர்  திரைப்பட பாடலை அழகாக பாடியது காண்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்

இதனிடையே மேடையில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்தமிழக முதல்வர் பொறுப்பேற்றபின் மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஒரு துறையை உருவாக்கியது தலைவர் கலைஞர் என்றும் அவர் உருவாக்கியபோது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று 100 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், தற்போது தமிழ்நாடு முதல்வர் 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 700 கோடி ரூபாய் அதிகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

MUST READ