ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறைவுற்ற நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சர் ஏ வா வேலு மற்றும் அமைச்சர் ஆர். காந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆவடி சாமு நாசர் மற்றும் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் ஆகியோர் சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்த சுரங்க பாலத்தின் பயன்பாடுகள்,கடந்த காலங்களில் ரயில் செல்லும் நேரங்களில் ரயில்வே கதவு மூடப்படுவதால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் மற்றும் காலதாமதமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையை தவிர்க்கும் வகையில் 2006-ல் இத்திட்டத்திற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டது, தற்போது பணி நிறைவுற்று இரு வழிதடமுள்ள சுரங்க கீழ்பால பணி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றியுள்ள சேக்காடு, கோபாலபுரம், அண்ணா நகர், தென்றல் நகர், கவரப்பாளையம், செந்தில் நகர், கரியப்பமேடு, காமராஜர் நகர், என பல்வேறு பகுதி மக்கள் காலதாமதம் இன்றி மற்றும் எரிபொருள் சிக்கனத்துடனும் சென்று வர இவ்வழி பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கப்பாதை பயன்பாட்டால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர், கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு வாசிகள், வணிகர்கள், மற்றும் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.