Homeசெய்திகள்ஆவடிஆவடியில்'ஹெல்மெட்' அணிந்து செல்லும் பரிதாப நிலை - மாமன்ற உறுப்பினர்கள்

ஆவடியில்’ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலை – மாமன்ற உறுப்பினர்கள்

-

ஆவடியில் கவுன்சிலர் தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் “எல்.இ.டி” விளக்கு அமைக்காததால், ‘ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஆவடி மாமன்ற உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மாதாந்திர மாமன்ற கூட்டம்

கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 48 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

வார்டில் இருக்கின்ற பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கோரிக்கை முன்வைத்தார்

குறிப்பாக 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதுரை ஆறுமுகம் பேசுகையில் சென்னை மாநகராட்சியை போன்று ஆவடி மாநகராட்சியிலும் மாமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வார்டு பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். அப்படி செய்யும் பட்சத்தில் வார்டில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை வார்டு உறுப்பினர்களே பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் என கோரிக்கை முன்வைத்தார்.

மாமன்ற உறுப்பினர் சேக்காடு ரமேஷ் பேசுகையில், சாலை மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்க முடியாத காரணத்தினால் கவுன்சிலர்களை பார்த்து வணக்கம் வைத்த பொதுமக்கள், தற்போது மறைமுகமாக திட்டியபடி செல்லும் சூழல் இருப்பதாகவும், இது என் வார்டுக்கு மட்டும் இல்லாமல் ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வெங்கடேசன், 31 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கூறுகையில்:

ஆவடி மாநகராட்சியில் ‘எல்.இ.டி.,’ விளக்கு அமைக்கப்படும் என கூறி, ஓராண்டாகியும் அதை அமைக்காததால், நாங்கள் பொதுமக்களுக்கு பயந்து ‘ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இனி எங்களை கேட்டால் மாநகராட்சி அதிகாரிகளின் செல்போன் எண்ணை கொடுத்து நேரடியாக பேசவைக்கிறோம் நீங்களே பதில் சொல்லிக் கொள்ளுங்கள், அப்படி பதில் சொன்னால் தான் பிரச்சனையின் ஆழம் உங்களுக்கு புரியும் என்றார்.

இவை தவிர, நாய்கள் பிடிக்கும் பிரச்சனை, மாடுகள் பிடிக்கும் பிரச்சனை, குடிநீர் பிரச்சனைகள் மற்றும் 20 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் அடங்கிய 31 தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

MUST READ