Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராம் டைடல் பூங்கா விரைவில் திறப்பு - முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பட்டாபிராம் டைடல் பூங்கா விரைவில் திறப்பு – முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

-

பட்டாபிராம் தொழில் நுட்ப பூங்கா உள்கட்டமைப்பு பணிகள் முடிந்து விட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் முதற்கட்டமாக சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

பட்டாபிராம் டைடல் பூங்கா  விரைவில் திறப்பு - முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

ஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 11.41 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் எனப்படும் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மாஃப. பாண்டியராஜன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.57 லட்சம் சதுர அடியில் 21 அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று தற்போது செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

பட்டாபிராம் டைடல் பூங்கா  விரைவில் திறப்பு - முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

கட்டி முடிக்கப்பட்ட 21 அடுக்கு மாடி கொண்ட இந்த டைடல் பார்க் தொழிற் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என்ற நிலையில். எஞ்சியுள்ள உட்புற அலங்கார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பட்டாபிராம் டைடல் பூங்கா  விரைவில் திறப்பு - முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

இந்நிலையில் டைட்டில் பார்க் தற்போதைய நிலையை டிட்கோ எம் டி சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார், உடன் ஆவடி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பகுதி விவரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

வரும் திங்கள் அன்று விரிவான ஆய்வு மேற்கொண்டு திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் –  முதல்வர் சந்திரபாபு நாயுடு

MUST READ