Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் – பொதுமக்கள் அதிர்ப்தி

-

ஆவடி பட்டாபிராம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணி விரைவில் முடிக்கப்படுமா??

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

ஆவடி சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018 அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து மேம்பால பணிக்கு திட்டமிட்டு அதற்காக முதல் கட்டமாக 33.48 கோடி ஒதுக்கப்பட்டு மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. பின்பு சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழி பாதையாக திட்டமிடப்பட்டது. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து 52.11 கோடி ரூபாயாக உயர்த்தி  மேம்பாலம் அமைக்க  பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

இதனிடையில் 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பால பணி தற்போது (2024) ஆறு ஆண்டுகள் கடந்தும்  பணிகள் நிறைவடையாமல் உள்ளது. அப்போதைய மாவட்ட ஆட்சியர்    ஆல் பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கு தெரிவித்தது என்னவென்றால் ”மேம்பால பணிகள் விரைவில் முடித்திடவும் அதற்கு முன்னதாக சர்வீஸ் சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைத்து தந்து கூடிய விரைவில் மேம்பாலத்தை ஒரு வழி பாதையாக மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தித் தர பணிகள் தீவிர படுத்தப்படும் என அறிவித்திருந்தார் ”.ஆனால் தற்போது வரை சர்வீஸ் சாலைகளும் மற்றும் ஒரு வழி பாதையும் அமைத்து தராமல் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

சாலையில் ஏற்படும் புழுதிகளால் வியாபாரிகள், அப்பகுதிவாசிகள் மற்றும் வழிப்போக்கர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் மற்றும் சாலை முறையாக அமைத்து தராததால் கரடுமுரடான ஜல்லிகள் நிறைந்த சாலையில் வாகனங்கள் செல்வதினால் வாகனம் பழுதடைதல், அடிக்கடி டயர்கள் பஞ்சர் ஆகுதல் மற்றும் விபத்துக்குள்ளாகுதல் போன்றவை தொடர்ந்து ஏற்படுவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு விரைவில் பணிகளை முடித்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாபிராம் பொதுமக்கள் பேட்டி

1. டாக்டர்.ராய் ரோசாரியோ,சமூக ஆர்வலர் 

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்திகடந்த 9 ஆண்டு காலமாக LC-2 ரயில்வே கேட்-ன் மேல் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை, அரசுத் துறைகள் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு என பல துறைகளில் கோரிக்கைகள் முன்வைத்து கடந்த ஆட்சி(அதிமுக) காலத்தில் இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளில் இந்த மேம்பாலத்தை திறப்பதாக அறிவித்துள்ளனர். மகிழ்ச்சி! வரவேற்கத்தக்கது . அது மட்டும் இல்லாமல் மேம்பால இரு வழி சர்விஸ் சாலைகளையும் சீரமைத்து சாலைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.  இப்பகுதியில் இருக்கக்கூடிய திருமண மண்டபங்கள்,பள்ளிகள் போன்றவற்றிற்கு பார்க்கிங் வசதி மேம்பால பகுதியின் கீழ் அமைத்து தரவேண்டும்.

ஒரு வழி பாதையாக ஏற்படுத்தித் தர உள்ள நிலையில் LC-2 ரயில்வே பாதை மூடப்படும் என அறிவித்துள்ளனர். அதற்கு இப்பகுதி மக்கள் மாற்று வழியாக பட்டாபிராம் இந்திய உணவு கழகம் (FCI) வழியாக இந்தியன் ஏர்போர்ஸ் செல்லக்கூடிய  இந்தியன் ஏர்போர்ஸ் சாலை (ஐ.ஏ.எப்) வழியில் சாலையை  மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆவடி மாநகராட்சி அதிகாரிகள்  சீர் அமைத்துக் கொடுத்தால் இப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தார்.

2. செந்தூர் ராஜன், பகுதி வாசி

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

இந்த மேம்பால பணி தொடங்கப்பட்டு  நிலம் கையகப்படுத்த அரசு பணம் தருவதாக அறிவித்தது. நீண்ட காலத்திற்கு பின்பு தான் பணம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இப்பகுதியில் இருக்கக்கூடிய வீடுகள் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. மேம்பால பணிகள் தொடங்குவதற்கு முன்பு இரு வழி சர்வீஸ் பாதைகள் அமைத்து தருவதாக அறிவித்திருந்தனர் ஆனால் தற்போது அமைத்துள்ள சர்வீஸ் சாலைகள் மிகக் குறுகிய அளவில் அமைந்துள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிரமம் ஏற்பாடும் வகையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை சரி செய்து தர வேண்டும் எனவும் தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

3. சந்திரசேகரன், பகுதி வாசி

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

1972 முதல் பட்டாபிராம் பகுதியில் வசித்து வருவதாகவும் பட்டாபிராம்-ல் மேம்பால பணியும், ஐ டி நிறுவன பணியும் தொடங்கப்பட்டு இடையில் பணிகள் முடக்கப்பட்டன. அதன் பின்பு தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார். இந்த மேம்பாலமும், ஐ.டி பார்க் நிறுவனமும்  விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் பெரும்  பயனாக இருக்கும். பட்டாபிராம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதிலும் பட்டாபிராம் பகுதி வளர்ச்சி அடையும் எனவே அரசு இந்த பணிகளை விரைவில் முடித்து தர வேண்டும் என சந்திரசேகரன் தெரிவித்தார்.

4. கண்ணன், வாகன ஓட்டி

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் - பொதுமக்கள் அதிர்ப்தி

பட்டாபிராம் பகுதியில் பிறந்ததிலிருந்து வசித்து வருகிறேன். இந்த மேம்பால பணி பல வருடமாக மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அதிக அளவில் பழுதடைந்து போகிறது. பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பே சர்வீஸ் சாலையை அமைத்துக் கொடுத்திருந்தால் எங்களுக்கு நன்றாக இருந்திருக்கும். சர்வீஸ் சாலையை அமைத்து தராததால் வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் புழுதியின் காரணமாக சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது.  ஐடி நிறுவனம் மற்றும் மேம்பால பணி இவை இரண்டும் விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும் இது என்னுடைய கோரிக்கை அல்ல பட்டாபிராம் பகுதி வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக முன் வைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

MUST READ