Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு – அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

-

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு – அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

ஆவடி அடுத்து உள்ள பட்டாபிராம் ரயில் நிலையம் மற்றும் பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் இரண்டிற்கும் நடுவே மிகவும் சுகாதார சீர்கேடு நிலையில் கழிவு நீர் நீண்ட காலமாக குட்டைப்போல் தேங்கி நிற்கிறது, இரு ரயில் நிலையங்களுக்கும் பயணிகள் இவ்வழியே கடந்து செல்கின்றனர் மிகவும் துர்நாற்றம் வீசிய நிலையிலும் மேலும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தொற்று வியாதிகளுக்கு ஆளாகிறார்கள்.

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

கொசுக்கடியால் இரவு நேரங்களில் பணிபுரியும் ரயில்வே துறை சார்ந்த ஊழியர்களுக்கும் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கும் மிகவும் தொல்லையாக உள்ளது என்கிறார்கள். மேலும், முறையான வகையில் கழிவு நீர் கால்வாய் அமைத்து சீரமைக்க வேண்டும்.

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

அது மட்டும் இல்லாமல் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதியும், மற்றும் மழை வெயில் காலங்களில் அவதிப்படாமல் இருக்க நிழற்குடை அமைத்தும், மேலும் முறையான வகையில் பயணிகளுக்கு ரயில்களின் நேரங்களை ஒலிபெருக்கியில் தெரியப்படுத்தவும், நீண்ட கால கோரிக்கையாக உள்ள சுரங்கப்பாதை அமைத்து தரவும், பட்டாபிராம் நடைமேடை இரண்டிலிருந்து நடைமேடை மூன்றுக்கு செல்லும் ரயில் மேம்பால பணி பாதியில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பில்லாத சுற்று சுவர் இல்லாத இரயில் மேம்பால நடைபாதையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு சீரமைத்து தரவும், அரசுக்கும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

பேட்டி 1:

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

ராய் ரொசாரியோ

ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பேசியது: பட்டாபிராம் பகுதியில் இரண்டாவது நடைமேடையில் சரியான நிழற்குடை இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மேம்பால பணியை சீரமைக்க பலமுறை கடிதம் எழுதியும் சரியான ரயில்வே துறை அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. இது போன்ற  நிகழ்வுகளை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என மிகவும் ஆவேசமாக பேசினார்.

பேட்டி 2:

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

அமித் பாபு

பயணிகள் நல சங்க உறுப்பினர் பேசியது: இந்த ரயில்வே துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும், சரியான பணியை செய்வதில்லை எனவும் இவர்கள் எந்த வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்று மட்டுமே சிந்திக்கின்றனர் மக்களுக்கு பயன்படும் எந்த பணியையும் இவர்கள் செய்வதில்லை. 11 மாதம் ஆகிறது ஒரு சுரங்க பாதை வேண்டுமென அளித்த மனுவுக்கு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீண்ட கால கோரிக்கையாக உள்ள சுரங்கப்பாதை அமைப்பதற்கு வரைபடம் உள்ளிட்ட அனைத்தும் சரியாக உள்ள நிலையில் மக்களுக்கு பயன்படும் இத்திட்டத்தை அமைத்து தர அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இத்திட்டத்திற்கு ஆவடி மாநகராட்சி ஒப்புதல் அளித்தும் ரயில்வே துறை காலதாமதம் செய்து வருகிறது.

 

MUST READ